குவாரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கூடச்சேரியில் உள்ள குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார் குவாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணைய வழி பட்டா மாறுதல் பணிகள், ஆக்கிரிமிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்மைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நாமக்கல் வட்டம், கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கலைச்செல்வி, துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.