பள்ளிப்பாளையத்தில் வட்டார வள மையம் பயிற்றுநர்கள் கூட்டம்
பயிற்றுநர்கள் கூட்டம்
பள்ளிப்பாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அனைத்து வகையான அரசு, நிதியுதவி, தனியார் பள்ளிகளில் இருந்து EMIS ல் Common poolக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள் மொத்தம் 1098 பேர் உள்ளனர். அம்மாணவர்கள் பற்றி தற்போதைய நிலையை TNSED SCHOOLS செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இப்பணியினை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இது குறித்து வட்டார அளவில் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்களுக்கு கூட்டம் நடைபெற்றது.
இக்கணக்கெடுப்பு குறித்து அரசுப்பள்ளி, நிதியுதவி பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட. உள்ளனர்.