ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்
காங்கேயம் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மேற்கு மண்டல BLA 2 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது். மக்களுக்கு தேவையான உணவு பிரச்சனை இல்லாமல் முதலமைச்சர் கவனித்து வருகிறார். தேர்தல் கால வாக்குறுதிகள் குறுகிய காலத்திற்குள் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். வாக்குறுதிகள் 75% மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி தலைவராக, அண்ணா, கலைஞர் கட்டி காத்த இயக்கத்தை சின்ன சிதறல், குழப்பம் இல்லாமல் கட்டிக் காக்கும் சாதனை பெருமையை செய்து வருகிறார்.

ஆட்சியை நடத்துவதிலும், கட்சியை நடத்துவதிலும் சிறப்பாக இருக்கிறார். மோடியை வீரத்தோடு எதிர்ப்பவர் ஸ்டாலின். இது கலைஞர் கற்று கொடுத்த பாடம். ஆட்சி, கட்சி இரண்டையும் தோள் மீது சுமந்து தொய்வின்றி நடத்துகிறார் என்றார்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்கப்புள்ளியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. மேற்கு மண்டல கூட்டம் இது. மேற்கு மண்டலத்தை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை தான், அமைச்சர் சாமிநாதனும், மாவட்ட செயலாளரும் கூட்டுவதாக சொல்லி, மேற்கு மண்டல மாநாட்டை இங்கு கூட்டி உள்ளனர். திராவிட இயக்கம் கருவான ஊர் திருப்பூர். தந்தை பெரியாரும், அண்ணாவும் முதன்முதலாக சந்தித்தது திருப்பூரில் தான். பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளமிட்ட ஊர் திருப்பூர். மாநகராட்சியாக உயர்த்தியது, மாவட்டமாக மாற்றியவர் மறைந்த தலைவர் கருணாநிதிதான். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். கோடிக்கணக்கில் உறுப்பினர்களை கொண்ட இயக்கத்துக்காக தேர்தல் பணி செய்பவர்கள் நீங்கள். பல கட்ட ஆய்வுக்கு பிறகு தான் வாக்குச்சாவடி பொறுப்பாளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இங்கு கொடுத்த பயிற்சிகளை மனதில் வைத்து தேர்தலில் செயல்பட வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். வாக்குச்சாவடி உள்ள குடும்ப விவரங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தினமும் கட்சிக்காக 1 மணிநேரம் ஒதுக்குங்கள். அரசின் திட்டங்கள் முழுமையாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டுவந்து தரும் மக்களின் நியாயமான கோரிக்கையை செவிசாய்த்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் நிறைவேற்றித்தர வேண்டும். அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்துவதால், யாரும் நம்மை நிராகரிக்க முடியாது. தமிழகத்தில் ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் மிகப்பெரியது கலைஞர் உரிமைத் தொகை திட்டம். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் பலமடங்கு வரவேற்பு நமக்கு கிடைக்கிறது. கட்டணமில்லா பேருந்து பயணத்தையும் பெண்கள் பயன்பெற்றுள்ளானர். நகைக்கடன் தள்ளுபடி என அரசால் பயன் அடைந்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கு காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெறுகிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நேரடியாக ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை பயன்பெறுகிறார்கள். ஆனால் மத்தியில் 2-வது முறையாக ஆளும் மோடி அரசு, 3-வது முறையாக வர ஆசைப்படுகிறார்கள். அவர்கள் வரக்கூடாது. கொள்ளை அடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என மோடி சொன்னார். இவற்றையெல்லாம் செய்தாரா? நம்முடைய பட்டதாரி இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார் மோடி. 2024- 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று சொன்னார்கள். இன்றைக்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பிறகு, கோவை, திருப்பூர் நகரங்கள் நொடிந்து போய்விட்டன. டாலர் சிட்டி திருப்பூர் இன்றைக்கு டல் சிட்டியாக மாறிவிட்டது. மத்திய பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால் கோவை மாநகரம் திறனற்ற மாநகராக தேய்பிறையாக மாறிவிட்டது. சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம், ஜவுளி சந்தைக்கான உட்கட்டமைப்பை ஈரோட்டில் மேம்படுத்தி உள்ளனர். ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்குது. ஆனால் அந்த தொழில் மோசமடைந்துவிட்டது. மோடி டிசைன், டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு? வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இன்னும் உள்ளன. சந்திராயன் விட்டதும், ஜி-20 மாநாட்டை மோடி பெருமையாக சொல்கிறார். சுழற்சி அடிப்படையில் ஜி.20-க்கு இந்தியா தலைமை தாங்கி உள்ளது. நிலவை நோக்கிய பயணம் பாஜகவின் சாதனை அல்ல. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பலரின் விண்வெளி ஆராய்ச்சி பங்கு இதில் உண்டு. ஆகவே தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து பாஜக கணக்கு காட்ட பார்க்கிறது. ஆனால் அதனையும் உடனடியாக வழங்கவில்லை. 2029-ம் ஆண்டு தான் வழங்குவார்கள். இந்த வஞ்சக திட்டத்தை எதிர்த்து திமுக தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க விடக் கூடாது. ஆகவே அடிமை அதிமுகவை உடன் வைத்துக்கொண்டுள்ளனர். அதிமுகவின் ஊழலுக்கும், பாஜகவின் மதவாதத்துக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி துணை நிற்கின்றனர். பழனிசாமி ஊழல் வழக்கை காப்பாற்றிக் கொள்ளவே டெல்லி சென்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால், அதிமுகவின் இன்றைய நிலையும் போய் விடும். இந்த தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கழக அமைப்பு செயலாளர் R.S. பாரதி.தமிழக செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பாசறை கூட்டத்திற்க்கு மேற்க்கு மண்டலத்தை சேர்ந்த சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாமக்கல் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார் பேசுகையில் டி எல் ஏ உறுப்பினர்கள் எவ்வாறு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என செயலியின் தன்மை குறித்து விளக்கி எடுத்துரைத்தார்.

பயிற்சி பாசறை கூட்டத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் நகர் மன்ற துணை தலைவர் ப.பாலமுருகன் வாக்குச்சாவடி முகவர்கள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர, ஒன்றிய, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பாரபாலயம் பகுதியில் பி எல் ஏ உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக திருப்பூர் மாவட்ட செயலாளர் இளவேந்தன் நன்றி கூறினார்.

Tags

Next Story