போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - போலீசார் விழிப்புணர்வு
போலீசார் விழிப்புணர்வு
குமாரபாளையத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என போர்டு வைத்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.
]குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் பங்கேற்று போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து, மரக்கன்றுகள் நட்டனர்.
பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் வராமல் தடுத்திட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:
பள்ளிப்பருவத்தில் நல்ல பழக்க மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, ஹான்ஸ், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்ற போதை பொருட்களை உபயோகப்படுத்தகூடாது. அவ்வாறு அதனை வற்புறுத்தி வாங்க சொல்லும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என பேனர் வைத்து போலீசார் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.