ஈஸ்வரன் எம்.எல்.ஏ தலைமையில் விவசாயிகள் குறைத்தீர் ஆலோசனை கூட்டம்
விவசாயிகள் குறைத்தீர் ஆலோசனை கூட்டம்
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைதீர் ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.
விவசாயிகள் அனைவரும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் உங்கள் கருத்துக்களை தீர்மானங்களாக கொண்டு வர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆா்.ஈஸ்வரன் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை வகித்தார் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொல்லப்பட்டி நடேசன் நல்லிபாளையம் கணேசன், பள்ளிப்பட்டி ஜெயராமன் திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகநாதன், ஆலங்காடு ஜெயமணி, சிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர் கோபால், கூட்டப்பள்ளி ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர் கணேசன், சுண்டமேடு சுந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், தலைவர் சேன்யோ குமார், மத்திய மண்டல இளைஞரணி செயலாளர் ராயல் செந்தில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவிரி உபரி நீரை ஏரிகளில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கள் இறக்க அனுமதி 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் சொட்டுநீர் பாசனம் பயிருக்கு ஏற்றார் போல் மானியத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதலை அரசு ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும் விவசாயப் பொருள்களின் உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பால் கொள்முதல் வளையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இறுதியாக பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆா்.ஈஸ்வரன், பல்வேறு கோரிக்கைகள் ஏற்கனவே அரசிற்கு சட்டமன்ற கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து இருக்கிறேன். மாதம்தோறும் நடக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும். உங்களது குறைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆண்டில் ஐந்து முறை நடக்கும் கிராம சபை கூட்டங்களில் குறைகளை தெரிவித்து கலைய தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும். விவசாய சங்க கூட்டத்தில் குறைகளை எடுத்துக் கூறினால் கிராம சபை கூட்டங்களில் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என பதில் வருகிறது.
கள் இறக்குவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் அரசின் கவனத்திற்கு அது செல்லும். குறைகளை எங்கு கண்டாலும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் நானே நேரில் சென்று நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு இடத்திற்கும் நானே நேரில் செல்ல முடியாது என்பதால் காணும் இடங்களிலிருந்து பொதுமக்கள் விவசாயிகள் இளைஞர்கள் அனைவரும் அரசு பணிகளில் கட்டிட கட்டுமானங்களில் தவறுகள் நடந்தால் என்னிடத்தில் தகவல் தெரிவிக்க 81110 69696 என்ற ஒரு வாட்ஸ் அப் எண்ணை கொடுத்துள்ளேன். அதில் எனக்கு தகவல் தெரிவித்தால் போதும் நானே நேரில் சென்று ஆய்வு செய்து குறைகளை கலைவேன். 100% லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டாலும் என்னால் முடிந்த அளவு எனக்கு தகவல் தெரிவித்தால் லஞ்சம் கொடுக்காமல் அந்த காரியத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பேன்.
ஒரு சில இடங்களில் இ சேவை மையங்கள் வைத்து இலவசமாக சான்றுகள் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் கட்டண கொள்ளைகள் தவிர்க்கப்படும் என்பதால் இதனை செய்து வருகிறோம். அதேபோல் ஓட்டுநர் உரிமம் பெற இருசக்கர வாகனத்திற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1,650 நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெற 1900 ம் செலுத்தினால் எங்கும் அலையாமல் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தர சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இடத்தில் கட்டணம் குறைவாக வாங்குவதை அறிந்தால் தற்போது இருசக்கர வாகனத்திற்கு 4000 நான்கு சக்கர வாகனத்திற்கு 6000 இரண்டிற்கும் சேர்த்து பெற 9000 பெற்று வருவது குறையும். எனவே உங்கள் கிராமங்களில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு இதனை தெரிவித்து ஓட்டுநர் உரிமம் பெற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுக தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி நன்றி கூறினார்.