பாரா மெடிக்கல் லேப் சங்கம் சார்பில் கல்வி கருத்தரங்கம், நலத்திட்ட உதவிகள்

கல்வி கருத்தரங்கம்
நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் குளக்கரை திடல் அருகே உள்ள அக்ரி பன்னீர் பாப்பாத்தியம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். அகில இந்திய தேசியத் தலைவர் காளிதாஸ் சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக கரூர், கோவை, ஈரோடு மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கல்விக் கருத்தரங்கம் மற்றும் பயோ வேஸ்டேஜ் தொடர்பான அடிக்கடி வரும் புகார்களுக்கு எவ்வாறு செயல்படுத்தலாம் என்று தேசிய தலைவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து இதில் 60 வயதிற்கு மேற்பட்ட ஆய்வுக நுட்புனர்களுக்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும் ஆய்வக நுட்புணர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பில் பள்ளியில் முதல் 3 இடங்கள் பெற்றதற்காக பாராட்டி பரிசளிக்கப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஆய்வக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
