மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்
ஈஸ்வரன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்
மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, கருமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழல் கூடம் அமைத்தல், மங்களம் ஊராட்சி ஊமையம்பட்டியில் ரூ.9.92 லட்சம் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீள்தேக்க தொட்டி அமைத்தல், மல்லசமுத்திரம் பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிடுதல், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து 8வது வார்டு ஆசிரியர் காலனி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் காண்கிரீட் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல், 9 வது வார்டு பள்ளிக்கூடம் சாலை முதல் பாரதியார் தெரு வரையில் ரூ.9 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்தல், கோட்டப்பாளையத்தில் ரூ.9.92 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், ராமாபுரம் மாதிரிப்பள்ளி பேருந்து நிலையத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகமணிகண்டன், மலர்விழி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிவேல், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை, ராமாபுரம் நிர்வாகி வெங்கடாசலம், கொ.ம.தே.க., மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரஞ்சித், மல்லசமுத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் எண்ணற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.