குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் உற்சாக வரவேற்பு வழங்கினார்.
கோவையில் திருமண விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குமாரபாளையம் வழியாக காரில் வந்தார். அவருக்கு குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று மலர்கொத்து வழங்கியும், சால்வைகள் வழங்கியும் வரவேற்றனர்.
இவைகளை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்று சென்றார். இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஒரு போக்குவரத்து போலீசாரும் இல்லை. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு முன்னாள் முதல்வரை காண அச்சத்துடன் சாலையை கடந்து வந்து கொண்டிருந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என காலை 08:00 மணி முதலும், மாலையில் இவர்கள் வீடு திரும்பும் நேரமான மாலை 04:00 மணி முதலும் புறவழிச்சாலை பகுதியில் ஒரு போக்குவரத்து போலீஸ் நிற்பது இல்லை. போக்குவரத்து போலீசார் பகல் 12:00 மணிக்கு மேல் வருவது, இரவு 09:00 மணிக்கு மேல் வருவது என்பது யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. அந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் கிடையாது. மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, ஒரு போக்குவரத்து போலீசாவது எப்போதும் போக்குவரத்து சரி செய்ய நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.