கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி.!!

X
தரமற்ற கேக்
கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஊட்டியில் ஒரு உணவகத்தில் உணவு அருந்தி உள்ளார் இதில் சாம்பாரில் எலி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர் இதுகுறித்து உணவகம் மேலாளரிடம் கேட்டுள்ளார்.ஆனால் அவர் இவ்வித நடவடிக்கை எடுக்காததால் அதனை வீடியோவாக எடுத்து இணைதளத்தில் பதிவிட்டார். இதனை அறிந்த உணவுத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த உணவகத்தை சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து குன்னூர் , கோத்தகிரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் ஆனால் கோத்தகிரி பகுதியில் பெயரளவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .தற்போது கோத்தகிரி பஸ் நிலையப் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வெஸ்ட்புருக் பகுதி சேர்ந்த முனியம்மாள் என்பவர் இந்த பேக்கரி கடையிலிருந்து கேக் வாங்கி சென்றுள்ளார் வீட்டுக்கு சென்று அதை பிரித்த குழந்தைகளுக்கு கொடுக்கும்போது உடனடியாக குழந்தை சாப்பிட முடியாமல் துப்பியுள்ளது. இதை பார்த்த முனியம்மாள் அப்போது அந்த கேக்கை பிரித்தபோது கேக்கில் அடிபாகத்தில் பாசி படிந்துள்ளது . மேலும் துர்நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக கடை உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் அந்த கேக்கை எடுத்து வந்து தருமாறு புது கேக்கை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட உணவுத்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறதுு. ஆனால் உணவுத் துறை அதிகாரிகள் இதுவரை எவ்வகை நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags
Next Story
