நமக்கு நாமே திட்டத்தில் புதிய பாலம் கட்ட நிதி உதவி
புதிய பாலம் கட்ட நிதி உதவி
குமாரபாளையம் தம்மண்ண செட்டி வீதியைச் சேர்ந்த எல்.விவேகானந்தன், எம்.ஹரி.பிரசாந்த், பி.ஆர்.பாலாஜி, ஆகியோர் குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான பழைய பள்ளிபாளையம் சாலையில் அப்பன் பங்களா வீதி செல்லும் சாலையில் கோம்பு பள்ளம் ஓடையின் குறுக்கே பழுதடைந்துள்ள தரைமட்ட பாலத்தினை இடித்துவிட்டு புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு, நமக்கு நாமே திட்டத்தில் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ. 33,90000 ல் பொதுமக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூ. 11 லட்சத்து 30 ஆயிரம் செலுத்த சம்மதித்து, அதன்படி இரண்டாம் கட்டமாக ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சரவணன் ஆகியோரிடம் வழங்கினர். அப்போது நகர மன்ற தலைவர் கூறுகையில், குமாரபாளையம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேம்படுத்த இந்நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நமக்கு நாமே திட்டத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர்
ராஜேந்திரன், திமுக பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில்குமார், ஞானசேகரன் விக்னேஷ், ராஜ்கணேஷ், மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.