பாவை நர்சிங் கல்லூரியில் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விளக்கேற்றும் விழா!

பாவை நர்சிங் கல்லூரியில் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விளக்கேற்றும் விழா!

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விளக்கேற்றும் விழா

பாவை காலேஜ் ஆப் நர்சிங் மற்றும் ரிசர்ச் கல்லூரியில் செவிலியர் பணிக்காக தம்மை அர்பணித்துக் கொண்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விளக்கேற்றும் விழா நடைபெற்றது. விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இராசிபுரம் சாந்தி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் சாந்தி கலந்து கொண்டார். விழாவினை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பாவை காலேஜ் ஆப் நர்சிங் மற்றும் ரிசர்ச் கல்லூரியின் முதல்வர் முனைவர் எ.ஹெப்சி ராச்சல் செல்லராணி வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் மருத்துவர் சாந்தி தம் சிறப்புரையில், சிறந்த கல்வி நிறுவனமான பாவை கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்பினை பயிலும் மாணவ, மாணவிகளாகிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். செவிலியர் கல்வியினை பயிலும் நீங்கள் நோயாளிகளுக்கும், மருத்துவருக்கும் பாலமாக செயல்படுகிறீர்கள். மேலும் உங்களின் பரிவான அக்கறையாலும், கவனிப்பாலும் நோயாளிகளை கவனித்து, ஒவ்வொருவருக்கும் உரிய கவனம் செலுத்தி, அவர்கள் குணமாவதில் பெரும் பங்கு வகிக்கிறீர்கள். இந்த உன்னதமான பணியினை தொடரும் நீங்கள் உங்களின் மகத்தான கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும். உங்களின் பணிக்கான நெறிமுறைகளை அறிந்து, அர்பணிப்புடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும். செவிலியர் பணியின் மதிப்பினை எப்பொழுதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. மேலும் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் இக்காலக்கட்டங்களில் உங்கள் செவிலியர் கல்வியிலும், உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நீங்கள் தீர்மானித்து அதற்கேற்றாற்போல் பயணிக்க வேண்டும். அதற்கு உங்கள் கல்லூரி நிர்வாகம் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் மாணவர்களாகிய உங்களுக்கு வழங்கியுள்ளது. அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் திறமையினை வளர்த்துக் கொண்டு சிறந்த செவிலியராக உருவாக வேண்டும். நீங்கள் கனிவு, பொறுப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு தன்னலமற்ற சேவை புரிந்து மக்களின் ஆரோக்கியத்தைப் பிரகாசித்திட செய்ய வேண்டும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.பின்னர் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் வாழத்துரை வழங்கினார்.

தொடர்ந்து பாவை நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவிகள் செவிலியர் பணிக்காக தங்களை அர்பணித்துக் கொள்ள ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர் மருத்துவர் சாந்திக்கு நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினர். நிறைவாக இளங்கலை நர்சிங் மூன்றாமாண்டு மாணவி செல்வி திருமதா நன்றி கூறினார். விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.இராமசாமி, பாவை பார்மஸி மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.சிவக்குமார், பாவை இன்ஸ்டிடுயூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் முதல்வர் முனைவர் பி.சித்ரா, பாவை பிசியோதெரபி சயின்ஸ் காலேஜ் முதல்வர் பெனாசீர், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் எம்.மோகன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story