எருமப்பட்டி ஒன்றியத்தில் இலவச தையல் பயிற்சி, ஒப்பனை பயிற்சி

எருமப்பட்டி ஒன்றியத்தில் இலவச தையல் பயிற்சி, ஒப்பனை பயிற்சி

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொகுக்கப் பள்ளியில் மக்கள் கல்வி இயக்கம் மற்றும் வீதி லீடர் பவுண்டேஷன் இணைந்து தையல் பயிற்சி மற்றும் ஒப்பனை பயிற்சி பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் லோன் வாங்கும் முறைகள் குறித்தும் தொழில் முனைவோர் எவ்வாறு செயல்படும் வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு ஆடிட்டர் ராஜா மற்றும் நாமக்கல் மாவட்ட தலைவர் சித்ரா மாவட்ட செயலாளர் திவ்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். முடிவில் மக்கள் கல்வி நிறுவன உதவி திட்ட அலுவலர் வடமலை நன்றி உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் எருமப்பட்டி ஒன்றியம் மற்றும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்த தையல் பயிற்சி மற்றும் ஒப்பனை பயிற்சி பெற்ற 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.

Tags

Next Story