நாமக்கல்லில் ஆமணக்கு பயிரை தாக்கும் நோய்கள் குறித்து இலவச பயிற்சி

நாமக்கல்லில் ஆமணக்கு பயிரை தாக்கும் நோய்கள் குறித்து இலவச பயிற்சி

ஆமணக்கு பயிர்

நாமக்கல்லில் வருகிற 10 ஆம் தேதி ஆமணக்கு பயிரைத் தாக்கும் நோய்கள் குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

குறைந்தசெலவில் அதிக லாபம் தரும் ஆமணக்கு பயிரில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து, நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 10 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறஉள்ளது. இப்பயிற்சியில் ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக்கொண்டு ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள், அதிகமகசூல் தரும் புதிய ரகங்கள், நுண்ணூட்ட உர மேலாண்மை முறைகள் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில், ஆமணக்கு சாகுபடி செய்யும் ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆமணக்கு பயிரிட ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்துகொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story