இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் இறையமங்கலம் ஆற்றில் கரைப்பு

இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் இறையமங்கலம் ஆற்றில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் 17 இடங்களில் இந்து முன்னணி கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது,

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் 17 இடங்களில் விநாயகர் இந்து முன்னணி சார்பில் 17 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது, கடந்த மூன்று நாட்களாக தினமும் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வதற்காக திருச்செங்கோடு பெரிய தேர் நிலை அருகே இந்து முன்னணி சார்பில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது,

பின்னர் காவல்துறை அனுமதியுடன் பதவி 17 விநாயகர் சிலைகள் இறையமங்கலம் ஆற்றில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான இந்து முன்னணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த விநாயகர் சிலை விஜர்சனம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.எஸ்.பி.கனகேஸ்வரி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story