கபிஸ்தலம் அருகே அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து: 5 பேர் படுகாயம்

கபிஸ்தலம் அருகே அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து: 5 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான அரசு பேருந்து

கபிஸ்தலம் அருகே அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து நடத்துனர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கும்பகோணம்- திருவையாறு நெடுஞ்சாலையில், கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஊராட்சி உடப்பாங்கரை என்ற இடத்தில் சாலை ஓரம் இருந்த மரத்தில் கும்பகோணத்தில் இருந்து அதி வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது.

இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த கபிஸ்தலம் பூண்டி குடியானத் தெரு, ஷாஜகான் மனைவி சுஜிதா பேகம் வயது 33, ஷாஜகான் மகன்கள் ஜாகீர் அகமது வயது 8, சப்ராஜ் வயது6, ராஜ்கபூர் மனைவி மல்கினிஷா வயது 58, மற்றும் அரசு பேருந்து நடத்துனர் திருப்பரம்பியம் கடை தெருவில் வசிக்கும் ஜானகிராமன் மகன் சாமிநாதன் வயது 57, ஆகிய ஐந்து பேர்களும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 5 பேர்களையும் உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசு பேருந்தை அஜாக்கிரதையாக ஓட்டி சாலை ஓரம் மரத்தில் மோதி விபத்தை உண்டு பண்ணிய அரசு பேருந்து ஓட்டுநர் உள்ளிக்கடை, மாரியம்மன் கோவில், தெரு சௌந்தரராஜன் மகன் பிரபாகரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகிறார்கள்,,,

Tags

Next Story