அரசு, தனியார் ஐடிஐ நேரடி சேர்க்கை நீட்டிப்பு - ஆட்சியர் ச.உமா தகவல்
ஆட்சியர் ச.உமா தகவல்
நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி நாள் 4.0 தொழிற் பிரிவுகளுக்கு 30.09.2023 வரையும், NCVT தொழிற் பிரிவுகளுக்கு 23.09.2023 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம் :
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் (NCVT) - ஓராண்டு (பெண்கள் மட்டும்) - 7
2 . தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு (NCVT) - ஈராண்டு (பெண்கள் மட்டும்) - 8
3 . கட்டட பட வரைவாளர் (NCVT) - ஈராண்டு - 5
4 . கம்மியர் ஆட்டோ பாடிரிப்பேர் (NCVT) - ஓராண்டு - 19
5 . இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் (Industry 4.0) - ஓராண்டு - 17
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணாக்கர்களும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கீரம்பூர் சென்று நேரடி சேர்க்கையில் விண்ணப்பித்து விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 04286-299597, 98428 57035, 89460 95841 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.