செல்லப்பம்பட்டியில் ரூ. 51 லட்சத்தில் திட்ட பணிகள் - பெ.இராமலிங்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
ரூ. 51 லட்சத்தில் திட்ட பணிகள் துவக்கம்
நாமக்கல் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் ரூ. 51 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் துவக்கி வைத்தார்.
புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை மற்றும் ரேஷன் கடை, கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ. 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜைக்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.பி.கெளதம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் ராம்குமார், துணை செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், துணைத்தலைவர் சத்தியபாமா வேல்முருகன், சதாசிவம், முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள், வார்டு கழக உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.