ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியில் சுதந்திர தின விழா

ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியில் சுதந்திர தின விழா

வித்யா நிகேதன் பள்ளி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளியின் செயலாளர் பி.சீனிவாசன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

பள்ளியின் தாளாளர் பிரகாஷ், பொருளாளர் பாலசுப்பிரமணியம், பள்ளி இயக்குனர்கள் கணேசன், பள்ளி முதல்வர் சித்ரா, ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் பலர் என பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பல்வேறு தேச தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்து எழுச்சி மிகுந்த பேச்சினால் அனைவரையும் கவர்ந்தனர்.

தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய முன் மொழிகளில் மாணவ மாணவிகள் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்டதைப் பற்றியும் எடுத்துக் கூறினர். தொடர்ந்து மாணவர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் உடைய அணிந்து தம்முடைய நடனம் மூலம் தேசபக்தியினை கூறும் வகையில் பாடல்கள் பாடியும் மாணவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தினர்.

2022 - 2023 கல்வியாண்டில் பள்ளியில் பயின்று சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினர். சுகந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story