திருச்சியில் 88 குற்றவாளிகளிடம் விசாரணை

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பெயரில் திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள சரித்திர பதிவேடு ரௌடிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை கண்ட்டோன்மென்ட், பாலக்கரை, கோட்டை, ஸ்ரீரங்கம் என 14 காவல் நிலையங்கள் உள்ளன. திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 88 சரித்திர பதிவேடு ரௌடிகள் மொத்தம் உள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளிகளாக a+வகையில் 26 பேரும், Aவகை குற்றவாளிகளாக 62 பேரும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் மாநகர உதவி ஆணையர் 6பேர், ஆய்வாளர்கள் 13பேர் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களில் வீடுகளில் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் எதுவும் உள்ளதா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 6:00 மணி முதல் சிக்கிய ரௌடிகளிடம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிற மாவட்ட, பிற மாநில ரவுடிகளுடன் தொடர்பு வைத்து குற்றச்செயலில் ஈடுபட திட்டம் வைத்துள்ளார்களா? என விசாரணை நடத்திவருகிறார்கள்.

Tags

Next Story