கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் விழா.. முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை நங்கநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டும் 15.7.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாக கொண்டாட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த புத்தகங்களில் 7740 புத்தகங்களை இந்த பள்ளியின் நூலகத்திற்கு வழங்கினார்.