இருள் சூழ்ந்து காணப்படும் பஸ் நிலையம்

இருள் சூழ்ந்து காணப்படும் பஸ் நிலையம்

Kanchipuram busstand 

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள மின்கோபுர விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்பக்கம் நுழைவாயில், நான்கு முனை சாலை சந்திப்பு அருகில், மாநகராட்சி சார்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. உயர்கோபுர மின்விளக்கால், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர், பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில், உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்குகளில், ஒரே ஒரு பல்பு மட்டுமே ஒளிர்கிறது. இதனால், அப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள்சூழ்ந்து உள்ளது. இதனால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இரவு நேரத்தில் இவ்வழியாக தனியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story