பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் குபேர மகாலட்சுமி யாகப் பெருவிழா

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் குபேர மகாலட்சுமி யாகப் பெருவிழா
X

யாகப் பெருவிழா

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 16-ஆம் ஆண்டு மகாருத்ர ஏகாதசனி, மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாகப் பெருவிழா நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் எழுந்தருளிய மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்று 16-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி மகாருத்ர ஏகாதசனி எனக் கூறப்படும் 121 முறை ருத்ரபாராயணம்,கலச ஆவாகனம், மூலமந்திர மகாமத்திர ஷன்னவதி ஹோமங்கள், மகா பூா்ணாகுதியும், மகா மாரியம்மனுக்கு அபிஷேகம், கலாசாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வேலூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூா் மகா மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா், காலசந்தி கட்டளைதாரா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story