குமாரபாளையம் நகர தலைமை அஞ்சல் நிலையம் - நகர எல்லைக்குள் அமைக்க வேண்டி ம.நீ.ம மனு
ம.நீ.ம மனு
குமாரபாளையம் கத்தாளைபேட்டையில் செயல்பட்டுவந்த தலைமை அஞ்சல் நிலையம் தற்போது பள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் காந்தி நகர் பகுதியில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. ஆனால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் தபால் நிலையத்திற்கு செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது.
அலைச்சல், பேருந்தில் பயணம் செய்து போனாலும் பேருந்து நிறுத்தத்திலிருந்து மீண்டும் 1 கி மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி தலைமை அஞ்சல் அலுவகத்தை நகர மையப்பகுதிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும். குமாரபாளையம் காவல் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சார்ந்த கட்டிடத்தில் சிறப்பு நில அளவை திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.தற்போது அலுவலகம் காலி செய்யப்பட்டு கட்டிடம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
எனவே காலியாக உள்ள கட்டிடத்தில் குமாரபாளையம் தலைமை அஞ்சலகத்தை நகர பகுதிக்குள் அமைக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் மகளிரணி நகர அமைப்பாளர் சித்ராபாபு சார்பாக தொழிலாளர் நல அணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா விடம் கோரிக்கை மனு வழங்கினர்.