குமாரபாளையம் அரசு பள்ளி மாணவன் மலேசியா பயணம்

குமாரபாளையம் அரசு பள்ளி மாணவன் மலேசியா பயணம்

 மலேசியா பயணம்

குமாரபாளையம் அருகே அரசு பள்ளி மாணவன் அரசு சார்பில் மலேசியா பயணமானார்.தட்டாங்குட்டை ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்ச்செல்வன் தாமரைச்செல்வி தம்பதியர். இவர்களின் இளைய மகன் இளவரசன் வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறான்.

சென்ற ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றான். மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றதால் தரப்புள்ளிகளின் அடிப்படையில் மாணவனுக்கு கலையரசன் விருது தமிழக முதல்வர் கையால் வழங்கப்பட்டது.

அவ்வாறு மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மலேசியா அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு நாட்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சனிக்கிழமை காலை மீண்டும் சென்னை வந்து சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story