ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் மற்றும் மதிப்பீடு பயிற்சி
மதிப்பீடு பயிற்சி
எருமப்பட்டி ஒன்றியம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடம் சார்ந்த கற்றல் விளைவுகள் மற்றும் மதிப்பீடு பயிற்சி எருமப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில் தமிழ் ஆசிரியர்கள் 30 பேரும் ஆங்கில ஆசிரியர்கள் 33 பேரும் கணித ஆசிரியர்கள் 24 பேரும் கலந்து கொண்டு பாடப்பகுதியில் உள்ள அடிப்படை திறன்களை வளர்த்தல் மற்றும் தேசிய திறனாய்வு தேர்வு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் பயிற்சி பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கற்பகம் செய்திருந்தார்.