”பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்” விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் ச.உமா துவக்கி வைத்தார்

”பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்” விழிப்புணர்வு பேரணி  மாவட்ட ஆட்சியர் ச.உமா துவக்கி வைத்தார்

விழிப்புணர்வு பேரணி

சமூக நலத்துறை சார்பில் ”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டமானது, குறைந்து வரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பாலின பாகுபாட்டை நீக்கவும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

இத்திட்டம் ஆண், பெண் குழந்தை விகிதத்தை சமன்படுத்துவதற்காக 2014 அக்டோபர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டமானது பெண் குழந்தைகளின் அதிகாரத்தையும், பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்பு சங்கமாகக் கூடிய முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு "பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்' (Beti Bachao, Beti Padhao) "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 2018 முதல் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்தியதற்காக ஒருமுறை தேசிய விருதும், இருமுறை மாநில அரசின் விருதும் பெற்றுள்ளதை தொடர்ந்து 2022-2023 நிதியாண்டிற்கான இத்திட்டத்தின் துவக்கமான பெண் குழந்தை பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா துவக்கி வைத்தார்.

இவ்விழிப்புணர்வு பேரணியானது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொடங்கி, மணிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக 'நாமக்கல் காவல் நிலையம் வரை சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில்

சுமார் 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) க.சவிதா, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story