காளப்பநாய்க்கன்பட்டியில் கூட்டுறவு வங்கியில் லோன் மேளா

காளப்பநாய்க்கன்பட்டியில் கூட்டுறவு வங்கியில் லோன் மேளா

லோன் மேளா

காளப்பநாய்க்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற லோன் மேளா நிகழ்ச்சியில் ரூ. 4.33 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டெபாசிட் சேகரிப்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சேந்தமங்கலம் பகுதிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சேந்தமங்கலம், நாமக்கல் மற்றும் எருமப்பட்டி சரகத்திற்கு உட்பட்ட சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் சார்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சுமார் 354 பயனாளிகளுக்கு ரூ. 4.33 கோடி மதிப்பிலான பயிர்க் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன், மத்திய காலக்கடன், சிறுவணிகர் கடன், கூட்டுப் பொறுப்புக் குழு கடன், ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், புதிய வீடு கட்டுவதற்கான கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டன.

புதியதாக கடன் கோரும் மனுதாரர்களிடமிருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஃபிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், சேமிப்பு கணக்கு டெபாசிட் உள்ளிட்ட டெபாசிட் திட்டங்களின் கீழ், 37 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. ரூ.88.59 லட்சம் பெறப்பட்டது.

விழாவை முன்னிட்டு, காளப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய், நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் ராஜவேல், நாமக்கல் சரக துணைப்பதிவாளர் கர்ணன், மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story