குமாரபாளையம் தொகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணி துவக்கம் - மதுரா செந்தில் துவக்கி வைத்தார்
சிறுபாலம் அமைக்கும் பணி துவக்கம்
குமாரபாளையம்_தொகுதி, பள்ளிபாளையம் நகரம் 12 வது வார்டு E.R தியேட்டர் ரோடு, 3,5,7,9,10,11,13 ஆகிய வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளில் ரூ. 42.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்த நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் அ.குமார், நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் மு.தாமரை, நகர மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story