மாநில அளவிலான போட்டியில் வென்ற காவலர்களுக்கு பதக்கங்கள் ச.ராஜேஷ்கண்ணன் எஸ்.பி பாராட்டு.
காவலர்களுக்கு பதக்கங்கள்
தமிழக காவல் துறையின் சார்பில் 63 வது மாநில அளவில் நடத்தப்பட்ட காவல்துறை ஆளிநர்களுக்கான Wrestling, Arm Wrestling, Bodybuilding, Boxing, Kabbadi, Power Lifting, Weightlifting போன்ற விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 7 ந் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில் கலந்து கொண்ட நாமகிரிப்பேட்டை காவல் நிலைய பெண் காவலர் அமுதா வலுதூக்குதலில் தங்கப்பதங்கமும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இராசிபுரம் போக்குவரத்து காவல் நிலைய பெண் காவலர் அருள்மொழி என்பவர் பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளார். திருச்செங்கோடு நகர காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ராதாகிருஷ்ணன் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார். பேளுக்குறிச்சி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் பாலமுருகன் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கமும், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் தினேஷ்குமார் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு பெருமை சேர்த்தனர்.
மேலும், தேசிய அளவில் நடைபெறும் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
பதக்கங்கள் வென்று நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவல் ஆளிநர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.