தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு எம்.எல்.ஏ - எம்.பி பாராட்டு
கராத்தே போட்டியில் சாதனை
ஹரியானா ஒலிம்பிக் அசோசியேசன் அங்கீகாரம் பெற்ற கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா இணைந்து நடத்திய தேசிய அளவிலான கராத்தே போட்டி ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா யூனிவர்சிட்டியில் உள்ள உள்விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதில் 23 மாநிலங்களில் இருந்து சுமார் 1600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் 146 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், தமிழ்நாடு 17 தங்கப்பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 20 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்று ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதன்முறையாக தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில சங்க தலைவர் சாய் ப்ரூஸ், செயலாளர் மோகன் தலைமையில் ஆசிய நடுவர்கள் மற்றும் சீனியர் மாஸ்டர்கள் அறிவழகன் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் மாணவர்களை வழி நடத்திச் சென்றனர்.
இதில் நாமக்கல் அட்வன்ஞர் அக்காடமி கராத்தே மாஸ்டர தங்கம் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் அட்வன்ஞர் அக்காடமி மாணவர் நிஸ்வந்த் ரவி தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே கட்டா பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர் நிஸ்வந்த் ரவியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் தேவராசன் மற்றும் கராத்தே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.