நடமாடும் ரத்த சேகரிப்பு மைய வாகனம் - மாவட்ட ஆட்சியர் ச.உமா துவக்கி வைத்தார்
ரத்த சேகரிப்பு மைய வாகனம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, மாவட்ட அரசு இரத்த மையங்களுக்கான புதிய நடமாடும் ரத்த சேகரிப்பு மற்றும் போக்குவரத்து வாகனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த மையம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஐசிஐசிஐ வங்கியின் நன்கொடையின் மூலமாக தற்பொழுது ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இதன் மூலம் எந்த இடத்திலும் வாகனத்தை நிறுத்தி அங்கேயே இரத்த கொடையாளரிடம் இரத்தம் சேகரிக்க முடியும். இதற்கான தனியான இடவசதியோ. உபகரணங்களை சுமந்த செல்ல வேண்டிய அவசியமோ இருக்காது. சுலபமாகவும், பாதுகாப்பாகவும் இரத்த யுனிட்டுகளை சேகரித்து இரத்த மையத்தில் பாதுகாக்க முடியும். இரத்த மையங்களுக்கான இந்த வாகன வசதியினால் சேகரிக்கும் இரத்த யுனிட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் இரத்தம் வழங்க முடியும்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி, மருத்துவர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.