மழைக்கால மின்பாதுகாப்பு அவசியம்: மின்வாரியம் வலியுறுத்தல்..

மழைக்கால மின்பாதுகாப்பு அவசியம்: மின்வாரியம் வலியுறுத்தல்..

மின்வாரியம்

மழைக்கால மின்பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தற்போது மின் தேவை அத்தியாவசியமான உருவாகி அதன் பயன்பாடு பெருகியுள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் ஆபத்தை மக்கள் உணராமல் உள்ளனர். மின் பயன்பாட்டில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். மின்நுகர்வோர் மின்கம்பம், அதன் ஸ்டே கம்பியின் மீது துணிகளை காயவைக்கவும்,பந்தல் அமைத்தல், கால்நடைகளை கட்டி வைத்தல், விளம்பர பலகைகள் அமைத்தல் போன்றவை செய்யக்கூடாது. மின்கம்பி அறுந்து விழுந்துகிடந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, அலைபேசி பயன்படுத்தக்கூடாது. வீடு கட்டும் போது மின்கம்பியில் இருந்து இடைவெளி விட்டு கட்ட வேண்டும். ஒவ்வொரு மின் இணைப்புகளிலும் இஎல்சிபி கருவி பொருத்த வேண்டும். மின்வேலி அமைக்கக்கூடாது. மின் இணைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட மின் ஒப்பந்ததாரர்களை கொண்டே மின்வயரிங் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story