நாமக்கல் மாவட்ட திமுக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம்
நிர்வாகிகள் நியமனம்
திமுக தலைமைக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பரிந்துரையின் படி திமுக தலைமை கழகத்தால் மாணவர் அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக எலச்சிபாளையம் அ.பாலசுப்பிரமணியன், துணை அமைப்பாளர்களாக குமாரபாளையம் ஐயப்பன் (எ) பெருமாள், பள்ளிபாளையம் ச.தங்கமணி, பரமத்தி வேலூர் பொத்தனூர் ச.ஸ்ரீ மதன், திருச்செங்கோடு உ.லாவண்யா, குமாரபாளையம் ந.ராகேஷ்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இதற்கான அறிவிப்பை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.