நாமக்கல் மாவட்ட அளவில் ஜூனியர் அதெலெட்டிக் போட்டிகள்
ஜூனியர் அதெலெட்டிக் போட்டி
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, இளையோர் தடகள போட்டிகள், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில், வரும் 19 ஆம் தேதி துவங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில், 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான, ஜூனியர் அதெலெடிக் போட்டிகள், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில், 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்கள், வரும், செப்டம்பர், 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் கலந்து கொள்ளும் வகையில், நாமக்கல் மாவட்ட தடகள அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
போட்டியில் கலந்து கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு, ஒரு போட்டியாளருக்கு ரூ. 200, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 100 வீதம் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகள் பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு போட்டியாளர், இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அனைத்து பள்ளி அணிகளும், தங்களது கல்வி நிறுவன கொடியுடன், வரும், 19ம் தேதி, காலை 8 மணிக்கு, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் நடக்கும் துவக்க விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 99421 25252, 63805 43667, 94448 79213 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தடகள சங்கம் தகவல் தெரிவித்துள்ளது..