நாமக்கல் மாவட்ட தையல் தொழிலாளர்கள் சங்க பேரவைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட தையல் தொழிலாளர்கள் சங்கம் (AITUC) சங்கத்தின் 10-, ஆம் ஆண்டு பேரவை கூட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் C.K.பிரபாகரன் தலைமை தாங்கினார் சங்க செயலாளர் K.S.பாலசுப்பிரமணியம் வேலை அறிக்கை வாசித்தார். பேரவை கூட்டத்தில் தையல் தொழிலாளர் நிலையை விளக்கி ஏஐடியுசி மாநில செயலாளர் S.சின்னச்சாமி பேசினார். மாவட்ட தலைவர் S.ஜெயராமன், மாவட்ட பொது செயலாளர் P.தனசேகரன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் S.ராமகிருஷ்ணன், சிபிஐ நகர செயலாளர் S.சுகுமார், சிபிஐ ஒன்றிய செயலாளர் P.S.முனுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரவை கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு மின்சாரம் 300 யூனிட் இலவசமாக வழங்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 6000 வழங்க வேண்டும், தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு தனி நிதி ஏற்படுத்தி நலவாரிய பலன்களை வழங்க வேண்டும், செப்டம்பர் 15 ல் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை தையல் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளமாக 25,000 கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு அரசே EPFO பிடித்தம் வைப்பு நிதி வசதி செய்து தர வேண்டும், தையல் தொழிலாளர்கள் நலவாரியத்தில் விபத்து மரணம் ரூ. 10 லட்சம், இயற்கை மரணம் ரூ. 5 லட்சம், திருமண உதவி தொகை ரூ. 1 லட்சம், மகப்பேறு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Tags

Next Story