நாமக்கல் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் - இராஜேஸ்குமார் எம்.பி வாழ்த்து
இராஜேஸ்குமார் எம்.பி வாழ்த்து
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர், மாவட்டத் துணைத் தலைவர், மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணை அமைப்பாளர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவராக மு.செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் பி.ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆர்.விநாயகமூர்த்தி, துணை அமைப்பாளர் ஏ.கே.ராஜா கண்ணன், அ.உமாசங்கர், அ.ராம்குமார், ஏ.ராஜசேகரன், டி.சுரேஷ், எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில் ராசிபுரம் நகரக் கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் எம்எல்ஏ ஒன்றிய கழக செயலாளர் கே.பி. இராமசுவாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.