நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன்  பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசனின் 13 ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நளா ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு T.L.S.காளியப்பன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் துணை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

தென்பாண்டியன் குழுமங்களின் தலைவர் நல்லுசாமி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொழில் வளர்ச்சி மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

சங்கத்தின் பொருளாளர் சந்திரமோகன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து கார்த்திகேயன், K.V.கணேசன், ஆடிட்டர் பழனிவேல், விஜயகுமார், வரதராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பேரமைப்பின் மாவட்ட இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் பிரபாகரன், அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், இணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா மற்றும் நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story