நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றனர்
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக கே.அருள், செயலாளராக கே.ஆனந்தன் பொருளாளராக பி.சீரங்கன், உதவி தலைவராக எஸ்.பாலச்சந்திரன், உதவி செயலாளராக எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குழுத் தலைவரும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான எஸ்.எல்.எஸ்.சுந்தரராஜன், நாமக்கல் தாலுக்கா உரிமையாளர் சங்க நடப்பு தலைவர் வாங்கிலி மற்றும் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
Next Story