நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் மாதக் கணக்கில் பெண்கள் மீது கொடுர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டிக்காமல் இருக்கும் மத்திய மற்றும் அம்மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் மாத கணக்கில் பெண்கள் மீது கொடூர பாலியல் தாக்குதலும், உச்சக்கட்டமாக பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை இதுவரை கண்டிடாமல் இருக்கும் ஒன்றிய அரசு மற்றும் மாநில பாஜக அரசு கண்டித்து திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி சாலையில் பழைய நீதிமன்ற அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்து கொண்டார்.
இதில் மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ஏ.ரியா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ்.ஜோதி மற்றும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் எஸ்.ராதிகா ஆகியோர் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் எம்.சாந்தி, பொதுக்குழு உறுப்பினர் எம்.இந்திராணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பி.அம்பிகா பாண்டியன், துணை தலைவர் எம்.ஜெயதேவி மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் கே.பி.மகேஸ்வரி, ஆர்.ராதாமணி, எஸ்.எம்.சித்ரா, எம்.கலா, பி.கயல்விழி, சமூக வலைதள பொறுப்பாளர் கே பரிமளாதேவி மற்றும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் எஸ்.அருள்செல்வி, துணைத் தலைவர் டி.தேன்மொழி, துணை அமைப்பாளர் ஆர்.பாவாயி, எஸ்.சுமதி, டி.ஜெயமணி, டி.இந்திராணி, பி.எம்.சந்திரா, எம்.திலகவதி, மாவட்ட சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் டி.சினேகா, ஏ.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மகளிர் நிர்வாகிகள், சார்பு அணி மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வார்டு, கிளை கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், கழக மகளிர் தொண்டர்கள் மற்றும் அனைத்து மகளிர்களும் கலந்து கொண்டனர்.