நான் முதல்வன் திட்ட கருந்தரங்கம்

நான் முதல்வன் திட்ட கருந்தரங்கம்
X

நான் முதல்வன் திட்ட கருந்தரங்கம்

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்ட கருத்தரங்கம் நடந்தது.

அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் நான் முதல்வன் திட்ட பயிற்சி ஐந்து நாள் கருத்தரங்கம் துவங்கியது. கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் இளங்கோ, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி, மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை ஊக்குவித்து, அடுத்து என்ன படிக்கலாம், என்று வழிகாட்டுவதுடன், தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் தனித் திறன் பெறவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவது போன்ற திறன் மேம்பாடு பற்றி பேசினார். துணை தலைவர் ஈஸ்வர், தாளாளர் புருஷோத்தமன் ,இன்கேஜ் நிறுவனம் நிர்வாகி விஜய் உள்பட பலர் பேசினார்கள்.

ஐந்து நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கில் தருமபுரி கிருஷ்ணகிரி , சேலம், மற்றும் நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 69 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 55 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அதிகாரி மீனாட்சி சுந்தர்ராஜன், ஒருங்கிணைப்பாளர் , இளங்கோ , திட்ட தொடர்பு அலுவலர் கோபிநாத் செய்திருந்தனர் .

Tags

Next Story