சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேசிய பொறியாளர்கள் தின விழா
தேசிய பொறியாளர்கள் தின விழா
சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்ஙமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மைக்ரோபயாலஜி துறை சார்பாக தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய பொறியாளர் தின விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினர். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மைக்ரோபயாலஜி துறைத் தலைவர் டாக்டர் மைதிலி வரவேற்புரை ஆற்றினார். அறிவியல் துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பல்வேறு அறிவியல் சார் போட்டிகளில் பங்கேற்றனர். இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்உயிரியல், பயோடெக்னாலஜி, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளைச் சார்ந்த அறிவியல் மாணவிகள் அறிவியல் சார்ந்த ரங்கோலி, ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் டி.என்.ஏ மூலக்கூறுகள், நுண் உயரியல் படைப்பாற்றலின் தத்துவங்கள் கிரீன் கவுஸ் மைக்ரோ டெக்னாலஜி, உலக இயக்கங்களில் ஓர் அறிவு முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை மைக்ரோ பயாலஜியின் பயன்பாடுகள் உள்ளிட்ட பொறியியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மையமாகக் கொண்டு தங்கள் படைப்புகளை அரங்கேற்றினர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் மு.கருணாநிதி, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், துறைத்தலைவர்கள் டாக்டர் மைதிலி, பேராசிரியர் பிரபுக்குமார், டாக்டர் பிரபாகரன், டாக்டர் மெய்வேல், பேராசிரியர் தனலட்சுமி, டாக்டர் கலைவாணி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் சுபராஜா மற்றும் பேராசிரியர் கவிதா ஆகியோர் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை மைக்ரோபயாலஜி துறை மாணவியர் அமைப்பினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.