திருச்செங்கோட்டில் தேசிய அளவிலான மகளிர் கயிறு இழுத்தல் போட்டி
மகளிர் கயிறு இழுத்தல் போட்டி
நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக, திருச்செங்கோட்டில் தேசிய அளவிலான மகளிர் கயிறு இழுத்தல் போட்டிகள் தொடங்கின. இப்போட்டிகளை, மாநில வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, தேசிய மற்றும் நாமக்கல் கயிறு இழுப்போர் சங்கம் இணைந்து நடத்தும் 36 வது தேசிய அளவிலான பெண்கள் சீனியர் ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் 25வது சப்ஜுனியர் சேம்பியன்ஷிப் கயிறு இழுக்கும் போட்டிகள் திருச்செங்கோட்டில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்க உள்ள போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆா்.ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூா் ஜி.தங்கவேல், திருச்செங்கோடு நகர திமுக செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான தா.கார்த்திகேயன், திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஆா்.நடேசன், டக் ஆப் வார் ஃபெடரேஷன் ஆப் இந்தியா பொது செயலாளர் மதன்மோகன், ஃபெடரேஷன் ஆப் இந்தியா தொழில்நுட்ப ஆலோசகர் மாதவி பட்டேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவின் முடிவில் செயலாளர் ஆதவன் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
இந்த போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், பாண்டிச்சேரி, சட்டிஸ்கர், தெலுங்கானா, அசாம், அருணாச்சல பிரதேஷ், டெல்லி என 11 மாநிலங்களைச் சேர்ந்த 374 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அணிக்கு தலா எட்டு பேர் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் சப்ஸ்டிடியூட்டுகளாக இரண்டு பேர் இருந்தனர். 13 வயதுக்கு கீழ் உள்ளோர் பிரிவில் விளையாடும் எட்டு பேரும் சேர்ந்து 340 கிலோ எடை 15 வயதுக்கும் கீழ் உள்ளோர் பிரிவில் 360 கிலோ, 17 வயதுக்கும் கீழ் உள்ளோர் பிரிவில் 420 கிலோ, 19 வயதிற்கும் கீழ் உள்ள ஒரு பிரிவில் 460 கிலோ, 19 கிலோவுக்கும் மேல் உள்ளூர் பிரிவில் 500 கிலோ எடையும் இருக்க வேண்டும் எனவும் கையை விடுவது கைகளை கீழே ஊடுவது போன்ற 14 பவுல்கள் மதிப்பெண் குறைவாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற விதிமுறைகளுடன், லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதிக மதிப்பெண் பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். தொடர்ந்து அரை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளில் இருந்து அகில இந்திய அளவிலான போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிக்கு முன்னதாக கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீராங்கனைகள் பங்கேற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் நடந்தது 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதல் லீக் போட்டியில் அரியானா பவர் அணியும், ஹிமாச்சல் பிரதேஷ் அணியும் மோதின. இதில் அரியானா பவர் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.