என்.கே.ஆர். மகளிர் கல்லூரி சேவை மையத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை

என்.கே.ஆர். மகளிர் கல்லூரி சேவை மையத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை

மாவட்ட ஆட்சியர் 

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் 2023 ஆண்டிற்க்கான தமிழ்நாடு பொறியியல் (BE / B.Tech) மாணவர் சேர்க்கைக்காக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, சேவை மையமாக (05.05.2023 முதல் 11.09.2023 வரை) செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு மூன்று சுற்றுக்களாக கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுற்று -1 - பொதுக்கலந்தாய்வு (இணையதள வாயிலாக) பொதுக்கல்வி (ACADEMIC GENERAL), தொழில்முறை கல்வி (VOCATIONAL) மற்றும் அரசு பள்ளி 7.5 % இடஒதுக்கீடு (GOVERNMENT SCHOOL STUDIED) பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் CUT OFF மதிப்பெண் 200.00 லிருந்து 177.00 வரை பெற்ற மாணவர்களுக்கு 28.07.2023 தொடங்கி 09.08.2023 அன்று நிறைவடைந்துள்ளது.

சுற்று -2 - பொதுக்கலந்தாய்வு (இணையதள வாயிலாக) பொதுக்கல்வி (ACADEMIC GENERAL), மற்றும் அரசு பள்ளி 7.5% இடஒதுக்கீடு (GOVERNMENT SCHOOL STUDIED) பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் CUT OFF மதிப்பெண் 176.99 லிருந்து 142.00 வரை பெற்ற மாணவர்களுக்கு 09.08.2023 முதல் 22.08.2023 வரை தற்சமயம் நடைபெற்று வருகிறது.

சுற்று -3 - பொதுக்கலந்தாய்வு (இணையதள வாயிலாக) பொதுக்கல்வி (ACADEMIC GENERAL) அரசு பள்ளி 7.5% இடஒதுக்கீடு (GOVERNMENT SCHOOL STUDIED) பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் CUT OFF மதிப்பெண் 141.86 லிருந்து 77.50 வரை பெற்ற மாணவர்களுக்கு 22.08.2023 முதல் 03.09.2023 வரை நடைபெறவிருக்கிறது.

துணைக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக) 06.09.2023 முதல் 08.09.2023 வரை நடைபெறவிருக்கிறது. எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு 10.09.2023 முதல் 11.09.2023 வரை நடைபெறவிருக்கிறது. கலந்தாய்வு இறுதி நாள் 11.09.௨௦௨௩ இச்சுற்றுகளில் மாணவர்கள் தங்களது விருப்பத்தின்படி கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்குரிய தற்காலிக இடஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ளலாம் மற்றும் தங்களுடைய சந்தேகங்களை தெளிவுப் படுத்திக் கொள்ளலாம். இச்சேவை மையம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படும்.

மேலும் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள பொறியியல் மாணவர்கள் https://www.tneaonline.org. மற்றும் https://www.dte.tn.gov.in போன்ற இணைய தளங்களிலும் கட்டடவியல் மாணவர்கள் https://www.barch.tneaonline.org என்ற இணைய தளத்திலும் கலந்தாய்வு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC – 27) இக்கல்லூரியில் அறை எண்: 55 ல் இயங்கி வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. லட்சுமி – கைபேசி எண் - 9445653375 மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச. ஜெயந்தி – கைபேசி எண் - 9750348621 ஆகியோரை நேரிலோ அல்லது கைபேசியின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு மாணவர்கள் கலந்தாய்வு சம்பந்தமான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

பொறியியல் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story