வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியப்பன் உயர்நீதி மன்ற ஆணைக்கு இணங்க ஆக்கிரமிப்பு அகற்றி உள்ளார். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷர்வணகுமார், அவருக்கு அரசியல் காழ்ப்புணர்ட்சி காரணமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த உத்தரவை நீக்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்பும் தக்க தீர்வு எட்டப்படாததால் தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க செயலாளரும், திருச்செங்கோடு வட்டாட்சியருமான விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் குறித்து அவர் கூறும் போது வட்டாட்சியரை பணி இடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்திய பின்பும் தக்க தீர்வு ஏற்படவில்லை எனவே தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவருக்கு தக்க தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார். இந்த போராட்டத்தில் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் திருச்செங்கோடு வட்ட தலைவர் சரவணகுமார் வட்ட செயலாளர் சாந்தகுமார், சங்க பொறுப்பாளர் அர்ஜுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story