டூவீலர் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்.
விபத்து
குமாரபாளையத்தில் டூவீலர் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே கத்தேரி தொட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் செங்கோடன், 56. விவசாயி. இவர் செப்.12ல் குமாரபாளையம் பவர் ஹவுஸ் அருகில் காலை 06:45 மணியளவில் பஜாஜ் டூவீலரில் வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த பொலிரோ ஜீப் வாகனம் இவர் வந்த டூவீலர் மீது மோதியதில், செங்கோடன் பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து, விபத்திற்கு காரணமான ஜீப் ஓட்டுனர் பவானியை சேர்ந்த ஜீப் ஓட்டுனர் பாலாஜி, 46, என்பவரை கைது செய்தனர்.
Tags
Next Story