மூதாட்டி கண்தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மூதாட்டி

மூதாட்டி கண்தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மூதாட்டி

மூதாட்டி கண்தானம் செய்து விழிப்புணர்வு

82 வயதில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்த மூதாட்டியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒருவரின் இறப்புக்கு பின்பு அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பல்வேறு நபர்களுக்கு அளித்து அவர்களுக்கு வாழ்வளிக்கும் நோக்கில் தற்போது உடல் உறுப்புகள் தானம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு பல்வேறு நிலைகளில் அவர்களது உறவினர்கள் மனம் உவந்து உடல் உறுப்புகளை பிறருக்கு அளிக்கின்றனர். அந்த வகையில் உடல் உறுப்பு தானம் குறித்து அரசு மற்றும் தனியார் சமூக அமைப்புகள் அரிமா சங்கங்கள் என பல பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகள் செய்து வரும் நிலையில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மற்றவர்களுக்கு அரசு விதிகளின்படி குறிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் உயிரிழக்கும் நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யும் நபர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் இது அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உடல் உறுப்பு தானங்கள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு மரியாதைகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செய்துவரப்படுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களில் மட்டும் ஐந்து நபர்கள் தங்கள் கடைசி நிலையில் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து பல உயிர்களை வாழ வைத்துள்ளது பல்வேறு நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்தி ஆகியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் பாட்டி திருமதி ஞானசௌந்தரி (82) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்பதும் , 1951 ஆம் ஆண்டு சி.வி.எம் அண்ணாமலை தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர். இந்நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்த நிலையில் ஏற்கனவே அவர் கண்தானம் செய்ய பதிவு செய்திருந்ததால் உடனடியாக இதுகுறித்து கூறிய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது கண்களை தனியார் கண் மருத்துவமனை சார்பில் தானமாக பெறப்பட்டது. 82 வயதில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்த அந்த மூதாட்டியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story