ஜனவரி 7 - ல் இன எழுச்சி மாநில மாநாடு- விடுதலைக் களம் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

ஜனவரி 7 - ல் இன எழுச்சி மாநில மாநாடு- விடுதலைக் களம் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

 இன எழுச்சி மாநில மாநாடு

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவோடு சேர்த்து விடுதலைக் களம் கட்சியின் இன எழுச்சி மாநாடு கரூரில் நடக்க இருக்கிறது. இம்மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தில் நடைபெற்றது. விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி வரும் 2024 ஜனவரி 7 ஆம் தேதி கரூரில் விடுதலைக் களம் கட்சியின் சார்பில் இன எழுச்சி மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்காக மாவட்ட அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவது என்றும், திண்ணைப் பிரச்சாரங்கள், சுவர் விளம்பரங்கள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டுக்காக பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி கரூரில் நடக்க இருக்கும் இன எழுச்சி மாநாட்டில் இரண்டு லட்சம் பேர் வரை திரட்டுவது என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைக் களம் கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் து. சரவணன், மாநிலப் பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியூர் பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் மோகன் குமார், வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும் நாமக்கல் தெற்கு மாவட்டம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சவுத் இண்டியன் ஃபார்மசி இராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் தங்கவேல், நகர செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ்குமார், பரமத்தி ஒன்றிய தலைவர் போத்தன் (எ) ரங்கசாமி, மோகனூர் ஒன்றிய செயலாளர் ராஜவேல் ஆகியோரும்.

ஈரோடு மாவட்டம் சார்பாக மாவட்டப் பொறுப்பாளர் கண்ணுசாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் கோபால், திருச்சி மாவட்டச் செயலாளர் கண்ணன், கரூர் மாவட்டத் தலைவர் மோகன் ராஜ், மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் பொம்மையராஜ், மாநில இளைஞரணிச் செயலாளர் சசிகுமார், மாவட்ட துணைச் செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவிக்குமார், கரூர் மாநகர தலைவர் சின்னசாமி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் முருகன், ஆட்டும்பரப்பு சுப்பரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ரங்கநாதன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சத்திரம் ஒன்றியம் சேகர் நிறைவாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜனவரி 7 ஆம் தேதி மாநாட்டை பிரம்மாண்டமாகவும், பெருஞ்சிறப்பாகவும் நடத்திட உறுதியேற்றுக் கொண்டார்கள். இதில் விடுதலைக் களம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story