கோயில் உண்டியல்கள் திறப்பு.

X
உண்டியல்கள் திறப்பு
அருள்மிகு ஆஞ்சநேயர் சாமி திருக்கோயிலில் உள்ள ஆறு உண்டியல்கள் மற்றும் அருள்மிகு நரசிம்ம சாமி திருக்கோயிலில் உள்ள நான்கு உண்டியல்கள் ஆக மொத்தம் இரண்டு திருக்கோயிலில் உள்ள பத்து உண்டியல்கள் பவானி, அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் கிடைக்கப்பெற்ற மொத்தத் தொகை ரூ. 45 லட்சத்து ,24 ஆயிரத்து 833, 53 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் 131 கிராம் எடையுள்ள வெள்ளி ஆகும். இந்த உண்டியல் திறப்பில் அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன் மற்றும் ரமேஷ்பாபு கலந்து கொண்டார்கள். மேலும் இந்த உண்டியல் திறப்புக்கு நாமக்கல்,ஐயப்ப சேவா சங்கம் சேவை செய்தனர்.
Next Story
