பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி நகர் மன்ற தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதியுமான செல்வராஜ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் செல்வராஜ் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ஆவரங்காடுஅரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பன் வழங்கி, அங்கன்வாடி பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவுகளை வழங்கினார். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் செல்வராஜுக்கு பள்ளிபாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story