வையப்பமலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்

வையப்பமலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்

 ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்

வையப்பமலையில் நடந்த தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேரவையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் வையப்பமலை நம்பெருமாள் கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், பேரவையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய கூட்டமைப்பின் தலைவராக மரப்பரை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், செயலாளராக கொளங்கொண்டை ஊராட்சி தலைவர் குழந்தைவேல், பொருளாளராக ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம், ஒருங்கிணைப்பாளராக கோட்டப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், பேரவை ஆலோசகர் ஆகியோர்களையும் ஒரு மனதனாக தேர்வு செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்களின் 11அம்ச கோரிக்கைகளை வரும் 16ஆம் தேதி தனித்தனியாக கடிதம் வாயிலாக முதலமைச்சருக்கு அனுப்புவது, வரும் 31 ந்தேதி தலைவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சென்னையில் நடைபெறவிருக்கும் பேரணியில் கலந்து கொள்வது, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளியன்று தவறாமல் மலசமுத்திரம் ஒன்றியத்தில் பேரவையின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தலைவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள் குளித்து பற்றி பேசப்பட்டது.

Tags

Next Story